குறள் : 921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

மு.வ உரை :

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார் தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

கலைஞர் உரை :

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்

சாலமன் பாப்பையா உரை :

போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

Kural 921

Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum
Katkaadhal Kontozhuku Vaar

Explanation :

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

Horoscope Today: Astrological prediction for November 02 2022



இன்றைய ராசிப்பலன் - 02.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


02-11-2022, ஐப்பசி 16, புதன்கிழமை, நவமி திதி இரவு 09.10 வரை பின்பு வளர்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 01.43 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 01.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 02.11.2022 | Today rasi palan - 02.11.2022

மேஷம்

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

ரிஷபம்

இன்று எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 2.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது உத்தமம்.

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 2.15 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

மகரம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001