ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இதனால், கடந்த 2 நாள்களாக வட தமிழகத்தில் பெய்த கனமழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும், வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இதனால், மாணவர்களின் நலன் கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(23.11.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.