ராணிப்பேட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கானப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வழக்கத்திற்கு மாறாக, இன்று காலை அதிகப்படியான பனிமூட்டம் காணப்பட்டது.
இதே நிலை, மாவட்டத்தின் ஆற்காடு ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், கலவை உள்ளிட்ட பகுதிகளிலும், இதே போல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக, சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செல்லும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக வாகனத்தின் முகப்பு விலக்கை எரியவிட்டவரே வாகனத்தை செலுத்தினர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.