ஆற்காடு அருகே குளத்தில் பீகார் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளதாக பொது மக்கள் விஏஓ கதிரவனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், எஸ்ஐ மகாராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். தொடர்ந்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 30 நிமிடம் போராடி சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பீகார் மாநிலம் ஜாமூல் பகுதியை சேர்ந்த கிராம்பைத் தான்சவுக்கை சேர்ந்த முகமு சம்சீர் (32) என்பதும் இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், 2 மகன் இருப்பது தெரியவந்தது.

அவர் எதற்காக ஆற்காடு வந்தார் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.