ஆற்காட்டில் சாராய வியாபாரி கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
Liquor dealer arrested in gundas act
ரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையில் ரத்தினகிரி போலீசார் சகாண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனிப்படையினர் ரோந்து சென்றபோது சாராயம் விற்பனை செய்த மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (53) என்பவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, பழனியின் மீது ரத்தினகிரி காவல் நிலையத்தில் ஏற்கனவே 4 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஸ்பி தீபாசத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அதற்குண்டான நகல் பழனியிடம் வழங்கப்பட்டது.