குறள் : 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.


மு.வ உரை :

நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

கலைஞர் உரை :

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

சாலமன் பாப்பையா உரை :

நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.


Kural 948

Noinaati Noimudhal Naati Adhudhanikkum

Vaainaati Vaaippach Cheyal

Explanation :

Let the physician enquire into the (nature of the) disease its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

Horoscope Today: Astrological prediction for November 29 2022


இன்றைய ராசிப்பலன் - 29.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

29-11-2022, கார்த்திகை 13, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 11.05 வரை பின்பு வளர்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் காலை 08.38 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


இன்றைய ராசிப்பலன் - 29.11.2022 | Today rasi palan - 29.11.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பணப்பிரச்சனை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள். 

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.

கன்னி

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.

துலாம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

தனுசு

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

இன்று இல்லம் தேடி மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். 

கும்பம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

மீனம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001