குறள் : 936

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

மு.வ உரை :

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர் வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

கலைஞர் உரை :

சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்

சாலமன் பாப்பையா உரை :

சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

Kural 936

Akataaraar Allal Uzhapparsoo Thennum
Mukatiyaan Mootappat Taar

Explanation :

Those who are swallowed by the goddess called gambling will never have their hunger satisfied but suffer the pangs of hell in the next world.

Horoscope Today: Astrological prediction for November 17 2022

இன்றைய ராசிப்பலன் - 17.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

17-11-2022, கார்த்திகை 01, வியாழக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.57 வரை பின்பு தேய்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 09.20 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 09.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 17.11.2022 | Today rasi palan - 17.11.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

இன்று அலுவலக பணிகளில் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறையும். பிள்ளைகள் வகையில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன்கள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சி எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.

கும்பம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001