ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த வர் சதீஷ் (வயது 21). தக்கோலத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்ட குழுவினரோடு சதீஷும் சென்றார். செல்லும் வழியில் இக் குழுவினர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடிக்கு வந்தனர். அங்குள்ள குளத்தில் அனைவரும் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர். 

பின் மீண்டும் அய்யப்பன் கோவில் நோக்கி புறப்பட்டனர். பஸ் புறப்பட இருந்த நேரத்தில் அனைத்து பயணிகளும் வந்துவிட்டார்களா என சரிபார்த்த போது சதீசை காணவில்லை. உடனே குளக்கரை பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு சதீஷின் ஆடைகள் கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் காரைக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தேடியபோது குளத்தில் மூழ்கி சதீஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.