காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்தது. அதேபோல், கலவை தாலுகாவிலும் அதிகபட்சமான மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 35.40 மி.மீ. மழை பதிவானது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: 
ஆற்காடு 12.00 மி.மீ, 
வாலாஜா 6.20 மி.மீ, 
அரக்கோணம் 12.40 மி.மீ, 
சோளிங்கர் 5.20 மி.மீ, 
பனப்பாக்கம் 10.20 மி.மீ. 

மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழையின் சராசரி அளவு 81.40 மி.மீ.