வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு அஷ்டகால மகாபைரவருக்கு 1,008 கிலோ விபூதி அபிஷேகம், ஹோமங்கள் புதன்கிழமை நடைபெறுகிறது.

தேய்பிறை அஷ்டமி மற்றும் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகாபைரவருக்கு 1,008 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகாகணபதி ஹோமம் ஆகியவையும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளதாக பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதற்கான பூர்வாங்க பூஜைகள் திங்கள்கிழமை (நவ.14) ஹோமங்களுடன் தொடங்கி நடைபெற்றது. மேலும் அகில உலக புரோகிதர்கள் மற்றும் புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரியாகமும் நடைபெறுகிறது.