Today is Shashti Vrat from October 25-30

சஷ்டி விரதம் 
ஆண் பெண் இருபாலரும் இருக்கலாம் 

இந்த குறிப்பிட்ட தேதியில் மாதவிடாய் ஏற்படும் என்று தோன்றும் பெண்கள் தவிர்க்க 

25 ஆம் தேதி அன்று 
உங்கள் குலதெய்வத்தை வணங்கி பழமையான கோயிலில் உள்ள முருகன் சந்நிதியில் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவங்குங்கள் வாய்ப்பிருந்தால் அந்த கோயிலை அடிப் பிரதட்சணம் செய்யுங்கள் 

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து பச்சைத் தண்ணீரில் தலை குளித்து நெற்றி நிறைய திருநீறு பட்டை அணிந்து கொண்டு செருப்பு அணியாமல் நடப்பது, தரையில் துண்டு விரித்துப் படுத்தல், 
தலையனை வேண்டாம்
குளிர் அதிகமாக இருக்கும் இடத்தில் வசிப்பவர்கள் புதிதாக வாங்கிய பாய் போர்வை கொண்டு படுத்தல், பகல் நேர உறக்கம் வேண்டாம்

உணவைப் பொருத்தவரை 

தண்ணீர் மட்டுமே அருந்தி இருத்தல் தேவைப் பட்டால் எலுமிச்சை சாறு அருந்தலாம் இதுவே சுத்த விரதம் 

அனைவரும் தினமும் இதையே முயற்சி செய்யுங்கள் முடியாத பட்சத்தில், காலை இரவு இரண்டு வேளையும் நீர் மட்டும் அருந்தி விரதம் இருங்க மதியம் மட்டும் கால் வயிற்றுக்கு பச்சரிசி சோறு + மோர் வழக்கமான சமையல் எதுவும் வேண்டாம் எந்த ஒரு சுவையோ தாளிப்போ எதுவும் வேண்டாம் 

இருவேளை நீர் ஒரு வேளை கால் வயிறு உணவு என்ற முறையும் முடியாதவர்கள் காலை நீர்
மதியம் கால் வயிற்றுக்கு பச்சரிசி சோறு மோர் இரவு ஏதாவது ஒரு பழம் வீட்டில் முருகன் படம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

தினமும் காலை (சூரிய உதயம்) மாலை (சூரியன் மறையும் நேரம்) (இரவு) தலைக் குளித்த பிறகு 108 முறை உங்கள் குலதெய்வம் பெயர் சொல்லி போற்றி என்று சொல்லுங்கள் அதனைத் தொடர்ந்து 108 முறை முருகன் பெயரில் உங்கள் மனதிற்கு நெருக்கமான பெயர் சொல்லி போற்றி சொல்லுங்க 

உதாரணமாக:- 
ஓம் சரவணபவ 
ஓம் செந்திலாண்டவா போற்றி 
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

முருகன் பாடல்களைப் பாடிக் கொண்டே /‌ படித்துக் கொண்டே 

பூ அணிவித்து 
சுத்தமான நல்லெண்ணெய் / நெய் கொண்டு அகல்விளக்கு ஏற்றி 
சுத்தமான சாம்பிராணி போட்டு
தங்களால் இயன்றதை நெய்வத்தயம் / படையல் செய்யுங்கள் 
பின்னர் கற்பூரம் காட்டி 

படையலில் உள்ளதில் ஒரு பகுதியை காகத்திற்கு வைத்த பின்னர் குடும்பத்தினருக்கு / தானம் கொடுங்க.

வாய்ப்பு உள்ளவர்கள் தினமும் பிள்ளையார் கோயிலில் சூரத் தேங்காய் / சிதறு தேங்காய் போடுங்க (உங்களுக்குள் உங்களைச் சுற்றி உள்ள தீய அலைவரிசைகளை தகர்க்கும்) 

தினம் ஒரு உயிருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

இந்த ஆறு நாளில் ஒரு நாள் 
முன் பின் அறிமுகம் இல்லாத மனிதர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் (கோயிலில் செய்வது சிறப்பு)

பொதுவாக ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் கூறுவர்.

அதன் படி கந்த சஷ்டி விரதம் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகல வியாதிகள் நீங்க தடைகள் நீங்க எதிரிகள் விலக
எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

இதுபோல் இன்னும் நிறைய பலன்கள் கூறுவர் அது ஒவ்வொரு தனிநபரின் அனுபவம் சார்ந்தது.

எதை செய்தாலும் மன நிறைவுடன் செய்யுங்கள்.