🌹 1985ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இந்திய குத்துச்சண்டை வீரர், விஜேந்தர் சிங் அரியானா மாநிலத்தில் பிறந்தார்.


🌹 1969ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி உலகில் முதல்முறையாக ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கான தொடுப்பு ஆர்பநெட் (ARPANET) மூலம் இணைக்கப்பட்டது.


பிறந்த நாள் :-


கவிஞர் வாலி 

✍ தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்.

✍ 1958ஆம் ஆண்டு 'அழகர் மலைக் கள்வன்' என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963ஆம் ஆண்டு 'கற்பகம்' என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

✍ ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

✍ இதுமட்டுமல்லாமல் பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு பாரத விலாஸ் திரைப்படத்தில் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

✍ திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் தனது 81வது வயதில் (2013) மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


கிமு 539 – பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார்.

312 – முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

969 – பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர்.

1390 – மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1591 – ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1618 – ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.

1665 – போர்த்துக்கீசப் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அந்தோனியோவைக் கொன்றனர்.

1675 – லைப்னித்சு முதற்தடவையாக ∫ என்ற குறியீட்டை நுண்கணிதத்தில் தொகையீட்டைக் குறிக்கப் பயன்படுத்தினார்.

1832 – இந்தியாவில் பங்களூரில் நிலை கொண்டிருந்த பிரித்தானியப் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.[1]

1863 – ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.

1886 – அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1914 – உதுமானியப் பேரரசு முதலாம் உலகப் போரில் இறங்கியது.

1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமராக மூன்றாம் விக்டர் இம்மானுவேல் மன்னரால் நியமிக்கப்பட்டார்.

1923 – உதுமானியப் பேரரசு கலைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.

1929 – 1929 வால் வீதி வீழ்ச்சி: "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.

1941 – பெரும் இன அழிப்பு: லித்துவேனியாவில் செருமனியப் படையினரால் 10,000 வரையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை அங்கேரியை அடைந்தது.

1948 – கலிலேயாவில் சாஃப்சாஃப் என்ற கிராமமொன்றில் புகுந்த இசுரேலியர்கள் 70 பாலத்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.

1950 – அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.

1955 – சோவியத் போர்க்கப்பல் நோவசிபீர்ஸ்க் செவஸ்தபோல் துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போர்க் கால கண்ணிவெடியில் சிக்கியது.

1956 – சூயெசு நெருக்கடி ஆரம்பம்: இசுரேலியப் படையினர் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.

1957 – இசுரேலிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கிரனேடுத் தாக்குதலில் பிரதமர் டேவிட் பென்-குரியன் மற்றும் அவரது ஐந்து அமைச்சர்கள் காயமடைந்தனர்.

1960 – அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.

1961 – ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.

1964 – தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.

1964 – 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஒஃப் இந்தியா" உட்படப் பல பெறுமதி மிக்க இரத்தினக்கற்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.

1967 – மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.

1969 – உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ஆர்ப்பாநெட் மூலம் இணைக்கப்பட்டது.

1991 – நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ப்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் என்ற சாதனையை அடைந்தது.

1998 – தென்னாப்பிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை இரு தரப்பு மீது குற்றம் சாட்டியது.

1998 – டிஸ்கவரி விண்ணோடம் 77-வயது ஜான் கிளென் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1998 – ஐக்கிய அமெரிக்காவில் உயர் வரையறு தொலைக்காட்சி ஆரம்பமானது.

1998 – 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.

1999 – ஒடிசாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

2002 – வியட்நாமின் ஓ சி மின் நகரப் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்தனர்..

2004 – செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குத் தானே காரணம் எனக் கூறும் உசாமா பின் லாதினின் காணொளி வெளியானது.

2005 – தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அறுபதிற்கும் அதிகமானோர் கொல்லப்படனர்.

2012 – அமெரிக்காவின் கிழக்குக் கரையை சாண்டி சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2015 – 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கையை சீனா கைவிடுவதாக அறிவித்தது.

இன்றைய பிறப்புகள்


1270 – நாம்தேவ், மகாராட்டிரத் துறவி (இ. 1350)

1808 – காத்தரினா சுகார்பெல்லினி, இத்தாலிய வானியலாளர் (இ. 1873)

1897 – ஜோசப் கோயபெல்ஸ், செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)

1909 – மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர், நூலாசிரியர் (இ. 1992)

1921 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைக் கல்வியாளர் (இ. 2013)

1923 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)

1931 – வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 2013)

1938 – எலன் ஜான்சன் சர்லீஃப், லைபீரியாவின் 24வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்

1950 – அப்துல்லா குல், துருக்கியின் 11வது அரசுத்தலைவர்

1974 – செல்வராசா கஜேந்திரன், இலங்கை அரசியல்வாதி

1976 – ராகவா லாரன்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்

1980 – பென் போஸ்டர், அமெரிக்க நடிகர்

1981 – ரீமா சென், இந்திய நடிகை

1985 – விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை வீரர்

1986 – ஸ்ரீதேவி விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


1618 – வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554)

1783 – ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாலர், இயற்பியலாளர் (பி. 1717)

1897 – ஹென்றி ஜார்ஜ், அமெரிக்க ஊடகவியலாளர், மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1839)

1911 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி (பி. 1847)

1929 – ஏ. சபாபதி முதலியார், தென்னிந்திய அரசியல்வாதி, தொழிலதிபர், புரவலர் (பி. 1838)

1949 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மேனிய-பிரெஞ்சு மதகுரு, மெய்யியலாளர் (பி. 1872)

1951 – இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (பி. 1864)

1959 – அலெக்சாந்தர் துபியாகோ, சோவியத் வானியலாளர் (பி. 1903)

1976 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்துக் கல்வியாளர் (பி. 1913)

1988 – கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1903)

1990 – கே. வீரமணி, தமிழகப் பக்தியிசைப் பாடகர் (பி. 1936)

2001 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர் (பி. 1930)

2006 – முகம்மது மசிடோ, நைஜீரிய அரசியல்வாதி (பி. 1928)

இன்றைய சிறப்பு நாள்


உலக பக்கவாத நாள்

குடியரசு நாள் (துருக்கி, 1923)