🌹 1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவில் இலினாய்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.
🌹 1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
நினைவு நாள் :-
🌹 1957ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி கெர்டி கோரி மறைந்தார்.
பிறந்த நாள் :-
கணேஷ் சங்கர் வித்யார்த்தி
🌷 விடுதலை போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
🌷 இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து வந்தவர், 'ஹமாரி ஆத்மோசர்கதா' என்ற தனது முதல் நூலை 16வது வயதில் எழுதினார்.
🌷 அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் காந்திஜியை முதன்முறையாக 1916ல் சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
🌷 விடுதலை போராட்டம், சமூகப் பொருளாதார புரட்சி, விவசாயிகள், ஜாதி, மதப் பிரச்சனைகள் குறித்து தனது இதழ்களில் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
🌷 உத்தரப்பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். எழுத்தையே ஆயுதமாக்கி எழுச்சிப் போராட்டம் நடத்திய இவர் தனது 40வது வயதில் (1931) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது.
1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார்.
1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார்.
1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார்.
1775 – அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார்.
1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்குப் பயணமானார்.
1859 – வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.
1863 – உலகின் மிகப் பழமையான காற்பந்துச் சங்கம் இலண்டனில் அமைக்கப்பட்டது.
1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.[1]
1905 – நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கீகரித்தது.
1909 – சப்பானியப் பிரதமர் ஈட்டோ இரொபூமி மஞ்சூரியா, கார்பின் தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912 – முதலாம் பால்கன் போர்: உதுமானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தெசாலோனிக்கி நகரம் விடுவிக்கப்பட்டு கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது. இதே நாளில் செர்பியப் படைகள் ஸ்கோப்ஜே நகரைக் கைப்பற்றின.
1917 – முதலாம் உலகப் போர்: கப்பொரெட்டோ சமரில் இத்தாலியப் படைகள் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளுடன் மோதி பெரும் இழப்பை சந்தித்தன.
1917 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் செருமனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.
1936 – முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1947 – சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.
1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.
1958 – பான் அமெரிக்கன் ஏர்வேய்சு போயிங் 707 இன் முதலாவது வணிக-நோக்குப் பறப்பை நியூயோர்க் முதல் பாரிசு வரை மேற்கொண்டது.
1967 – முகம்மத் ரிசா பகுலவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.
1968 – சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.
1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
1979 – தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1985 – ஆத்திரேலிய அரசு உலுரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.
1991 – யுகோசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியாவில் இருந்து விலகியது.
1994 – யோர்தானும் இசுரேலும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1994 – பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் பாதி சிக்காகி மால்ட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
2000 – ஐவரி கோஸ்ட்டின் அரசுத்தலைவர் இராபர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரண்ட் பாக்போ தலைவரானார்.
2001 – ஐக்கிய அமெரிக்கா தேசப்பற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.
2002 – மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2003 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.
2015 – 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.
2016 – இத்தாலியின் நடுப்பகுதியை 6.6 அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2019 – அமெரிக்கப் படையினர் சிரியா, இதுலிபில் நடத்திய தாக்குதலில் இசுலாமிய அரசுத் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி தற்கொலை செய்து இறந்தார்.
இன்றைய பிறப்புகள்
1841 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1886)
1873 – ஏ. கே. பசுலுல் ஹக், வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 1962)
1883 – நெப்போலியன் ஹில், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1970)
1890 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி, இந்திய இதழியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1931)
1892 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (இ. 1950)
1902 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (இ. 1980)
1919 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானின் அரசுத்தலைவர் (இ. 1980)
1920 – சாரா இலீ இலிப்பின்கோட், அமெரிக்க வானியலாளர்
1923 – இராம் பிரகாசு குப்தா, இந்திய அரசியல்வாதி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் (இ. 2004)
1932 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடக முதலமைச்சர் (இ. 2011)
1933 – முருகேசு சுவாமிகள், ஈழத்து ஆன்மிகவாதி (இ. 2007)
1947 – இலரி கிளின்டன், அமெரிக்க அரசியல்வாதி
1947 – சாருமதி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1998)
1952 – லார்ஸ் பீட்டர் ஹான்சென், அமெரிக்கப் பொருளியலாளர்
1959 – ஏவோ மொராலெஸ், பொலிவியாவின் 80வது அரசுத்தலைவர்
1965 – மனோ, தென்னிந்தியத் திரைப்பட பாடகர்
1974 – ரவீணா டாண்டன், இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்
1985 – அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1991 – அமலா பால், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய இறப்புகள்
899 – ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849)
1764 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)
1879 – அ. சந்திரசேகர பண்டிதர், மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞர்
1930 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிசு மருத்துவர் (பி. 1860)
1957 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (பி. 1896)
1974 – மிர்துலா சாராபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)
2013 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர் (பி. 1927)
2019 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1952)
2019 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (பி. 1920)
இன்றைய சிறப்பு நாள்
இணைப்பு விழா (சம்மு காசுமீர்)