🌹 1908ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார்.


🌹 1906ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா மறைந்தார்.


நினைவு நாள் :-


காமராஜர்

📖 கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📖 தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

📖 1936ல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1940ல் விருதுநகர் நகராட்சித் தலைவர், 1946-52 வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

📖 இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

📖 இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் தலைவர் என்றும், ஈ.வே.ரா.,பச்சைத் தமிழன் என்றும் பாராட்டியுள்ளார்.

📖 பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், தனது 72வது வயதில் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மறைந்தார். மறைவுக்குபின் 1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


பிறந்த நாள் :-


மகாத்மா காந்தி 

🌺 காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளை கடைபிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007ல் அறிவித்தது.

🌺 இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருட்களுக்கு அன்னியர் வரி விதிப்பதா?' எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.

🌺 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக 'ஆகஸ்ட் புரட்சி' என அழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இவர் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி புதுதில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லால் பகதூர் சாஸ்திரி 

🌸 இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி 1904ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார்.

🌸 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்தபோது லால் பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக்கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். இவர் 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.

1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான்.

1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார்.

1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.

1552 – உருசியப் படைகள் கசானை ஊடுருவின.

1608 – டச்சு வில்லைத் தயாரிப்பாளர் ஆன்சு லிப்பர்சி முதலாவது தொலைநோக்கியை டச்சு நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தினார்.

1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே அமெரிக்க விடுதலைப் படையால் தூக்கிலிடப்பட்டார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படையினர் வர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.

1865 – இலங்கையின் முதலாவது தொடருந்து போக்குவரத்து சேவை கொழும்புக்கும் அம்பேபுசைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.[1]

1903 – யாழ்ப்பாணம் ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.[2]

1919 – அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

1925 – தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.

1937 – டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டை: நாட்சி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.

1942 – இரண்டாம் உலகப் போர்: குயீன் மேரி கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு குரக்கோவாவை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் வார்சாவா கிளர்ச்சியை அடக்கின.

1955 – ஆரம்பகாலக் கணினிகளில் ஒன்றான எனியாக் மூடப்பட்டது.

1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது..

1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

1970 – அமெரிக்கா, கொலராடோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.

1972 – இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.

1990 – சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் உயிரிழந்தனர்.

1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.

1996 – பெரு விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேரும் உயிரிழந்தனர்.

2006 – பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

2007 – தென் கொரிய அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி வட கொரியா சென்றார்.

2016 – எத்தியோப்பியாவில் பண்டிகை ஒன்றின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

2018 – சவூதி ஊடகவியலாளர் ஜமால் காசோகி இசுதான்புல்லில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்கு சென்றதை அடுத்து அவர் காணாமல் போனார்..

இன்றைய பிறப்புகள்


1452 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (இ. 1485)

1538 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியப் புனிதர் (இ. 1584)

1746 – பீட்டர் சாக்கப் இச்செலம், சுவீடன் வேதியியலாளர் (இ. 1813)

1800 – நாட் டர்னர், அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)

1848 – காசிவாசி செந்திநாதையர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1924)

1866 – சுவாமி அபேதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1939)

1869 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. 1948)

1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1-வது பிரதமர் (இ. 1951)

1904 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1991)

1904 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1966)

1904 – அ. சிவசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1908 – டி. வி. இராமசுப்பையர், தமிழகப் பத்திரிகையாளர், தொழிலதிபர் (இ. 1984)

1913 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2013)

1916 – ப. நீலகண்டன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 1992)

1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்

1930 – ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2018)

1933 – சான் பி. குர்தோன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்

1939 – புத்தி குந்தேரன், இந்தியத் துடுப்பாளர் (இ. 2006)

1945 – மார்ட்டின் எல்மேன், அமெரிக்க குறியாக்கவியலாளர்

1959 – பாண்டியராஜன், தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர்

1965 – டொம் மூடி, ஆத்திரேலியத் துடுப்பாளர்

1974 – ரச்சநா பானர்ஜி, இந்திய நடிகை

இன்றைய இறப்புகள்


1588 – பெர்னாடினோ தெலெசியோ, இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. 1509)

1803 – சாமுவேல் ஆடம்ஸ், அமெரிக்க மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1722)

1906 – ராஜா ரவி வர்மா, இந்திய ஓவியர் (பி. 1848)

1927 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. 1859)

1975 – காமராசர், சென்னை மாநிலத்தின் 3-வது முதலமைச்சர் (பி. 1903)

1980 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. 1895)

1992 – ஹொன்னப்ப பாகவதர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1915)

2014 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)

இன்றைய சிறப்பு நாள்


காந்தி ஜெயந்தி (இந்தியா)

அனைத்துலக வன்முறையற்ற நாள்

விடுதலை நாள் (கினி, பிரான்சிடம் இருந்து, 1958)