அரக்கோணம் அடுத்த மூதுாரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பாஸ்கர் (21), தனியார் நிறுவன ஊழியர். இவர், சோளிங்கரில் நடந்த உறவினர் வீட்டு திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டு, மீண்டும் அரக்கோணம் நோக்கி நேற்றிரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தாளிக்கால் அருகே சென்றபோது, அங்குள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கும்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி பைக்குடன் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த சோளிங்கர் போலீசார் அங்கு சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.