ராணிப்பேட்டையில் நேற்று காலை முதல் வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், ராணிப்பேட்டையில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதே, ஆனால் இப்படி வெயில் வாட்டுகிறதே என்று மக்கள் புலம்பினர்.
குறிப்பாக, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நேற்று மதியத்துக்கு பின்னர் திடீரென்று மேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் புழுக்கம் மறைந்து பூமி குளிர்ந்தது.