குறள் : 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
மு.வ உரை :
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல் காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
கலைஞர் உரை :
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்
சாலமன் பாப்பையா உரை :
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
Kural 891
Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar
Potralul Ellaam Thalai
Explanation :
Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
Horoscope Today: Astrological prediction for October 03 2022
இன்றைய ராசிப்பலன் - 03.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-10-2022, புரட்டாசி 16, திங்கட்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.38 வரை பின்பு வளர்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் இரவு 12.25 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. துர்காஷ்டமி, மஹாஷ்டமி. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 03.10.2022 | Indraya Raasi Palan
மேஷம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை.
மிதுனம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த செயலை செய்து முடிக்க உடனிருப்பவர்கனை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.