ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகு தியில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. 
நேற்று முன்தினம் 92 மில்லி மீட்டர் மழை பெய்ததால் சோளிங்கர் அடுத்த போளிப் பாக்கம் கிராமத்தில் மஞ்ச கிணறு தெரு, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் புகுந்தது. 

ஒன்றியக்குழுதுணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் சென்று பார்வையிட்டு கழிவுநீர் கால்வாய்தூர்வாரப்பட்டு, தற்காலிகமாக மழை நீர் வீடுகளுக்கு செல்லாத வாறு தடுப்பு அமைக்கப்பட்டது. 

நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.