ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று இரவில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக சோளிங்கர் பகுதியில் 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஐப்பசி மாதம் பிறக்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தொடங்கியுள்ளது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பரவலான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை முதலே ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவில் 2 மாவட்டங்களிலும் கனத்த மழை கொட்டித் தீர்த்ததது.
ராணிப் பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிகபட்சமாக 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதே போல் வாலாஜா பேட்டையில் 38 மி.மீ., அரக்கோணத்தில் 24 மி.மீ., ஆற்காட்டில் 14 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆலங்காயம் பகுதியில் 72 மி.மீ. மழை பதிவானது.
திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் 20 மி.மீ., நாட்றம்பள்ளியில் 18 மி.மீ., வாணி யம்பாடியில் 16 மி.மீ. மழை பதிவானது.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று இரவில் பரவலான மழை பெய்துள்ளது.
இதனால் 4 மாவட்ட விவசா யிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.