ஆற்காடு அருகே தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆற்காடு அடுத்த புதேரி ரோட்டு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(28). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு, கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி மற்றும் உடல் நல பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட சுந்தர்ராஜன் ஊருக்கு வந்தார். தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா இன்ஸ் பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சுந்தர்ராஜனுக்கு திரும ணம் ஆகவில்லை.