ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கல்மேல்குப்பம் பஞ்.கல்புதூர் கிராமத்தை ஒட்டி இரண்டு தோல் கழிவு வேகவைக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
இங்கு துண்டு தோல்களை கொண்டு வந்து வேகவைத்து, காய வைத்து தூளாக்கி விற்பனை செய்கின்றனர். 'லெதர் மீல்' எனப்படும் வேகவைக் கப்பட்ட தோல் தூள், கோழி தீவனம் தயாரிக்கும் கம்பெனிகள், உரம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு போகிறது.
இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவுநீர் வழிந்து நீர்பிடிப்பு கால்வாய்கள் வழியாக கல்புதூர் ஏரியில் கலக்கிறது.
இதனால் ஏரி மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. பல ஆண்டுகளாக கிராமமக்களின் எதிர்ப்பையும் மீறி நடக்கும் இந்த தொழிற்சாலைகளால் நீர், நிலம் மாசுபடுகிறது.
எனவே தோல் தொழிற்சாலைகளை மூட வேண்டும். அதற்கு பதில் நீர், நிலம், காற்று மாசுபடாதவகையில் வேறு தொழிற்சாலைகள் இங்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இந்த கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.