குறள் : 901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

மு.வ உரை :

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார் கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

கலைஞர் உரை :

கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்

சாலமன் பாப்பையா உரை :

மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

Kural 901

Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar
Ventaap Porulum Adhu

Explanation :

Those who lust after their wives will not attain the excellence of virtue and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

Horoscope Today: Astrological prediction for October 13 2022


இன்றைய ராசிப்பலன் - 13.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



13-10-2022, புரட்டாசி 26, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.09 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.41 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி. கிருத்திகை விரதம். விநாயகர் -முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. 

இன்றைய ராசிப்பலன் - 13.10.2022 | Today rasi palan - 13.10.2022


மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் சற்று பார்த்து பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர் பதவிகளை அடைய முடியும். மன நிம்மதி ஏற்படும். 

சிம்மம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளும் விலகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.





கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001