குறள் : 900

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

மு.வ உரை :

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

கலைஞர் உரை :

என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது

சாலமன் பாப்பையா உரை :

மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

Kural 900

Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar
Sirandhamaindha Seeraar Serin

Explanation :

Though in possession of numerous auxiliaries they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.

Horoscope Today: Astrological prediction for October 12 2022


இன்றைய ராசிப்பலன் - 12.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam




12-10-2022, புரட்டாசி 25, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.00 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் மாலை 05.10 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 05.10 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 12.10.2022 | Today rasi palan - 12.10.2022

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

இன்று சகோதர சகோதரி மூலம் அனுகூலம் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிய பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் எதிர்பாராத இடமாற்றத்தால் மன குழப்பம் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் நிலையில் அசதி சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் கூட்டாளிகளின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும்.






கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001