குறள் : 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
மு.வ உரை :
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.
கலைஞர் உரை :
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்
சாலமன் பாப்பையா உரை :
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?
Kural 897
Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam
Thakaimaanta Thakkaar Serin
Explanation :
If a king incurs the wrath of the righteous great what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
Horoscope Today: Astrological prediction for October 09 2022
இன்றைய ராசிப்பலன் - 09.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
09-10-2022, புரட்டாசி 22, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.25 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்நமி விரதம்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 09.10.2022 | Today rasi palan - 09.10.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்
இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.
கன்னி
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் சூழ்நிலை அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை தரும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை மன தைரியத்தோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.