Calibration camp to provide modern prosthetic arm and leg tomorrow at Solinger, Kaveripakkam
காவேரிப்பாக்கம், சோளிங்கரில் நாளை நவீன செயற்கை கை, கால் வழங்க அளவீடு செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் மற்றும் சோளிங்கர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கீழ் நவீன செயற்கை கை, கால் அளவு எடுப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (21ம் தேதி) காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை காவேரிப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 

அதேபோல், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் செயற்கை கை, கால் அளவீடு செய்வதற்கான முகாம் நடைபெற உள்ளது. 

இம் முகாமில் பங்கேற்போர் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவச்சான்று, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், எக்ஸ்-ரே, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.