வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்கள் வாங்கும் புத்தகங்களில் கையெழுத்திட்டு குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சி வாலாஜாவிலுள் அரசு மகளிர் கல்லுரியில் நடந்துவருகிறது.
தென்னிந்திய புத்தகபதிப்பாளர் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டுள்ளன. மூன்றாவது நாளான மற்றும் ஞாயிற்றுகிழமை யான நேற்று கூட்டம் அலைமோதியது. இதில் குறிப்பாக 45க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கண்காட்சியில் பார்வையிட்டிருபது குறிப்பிடத்தக்கது. அதோ போல் 3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள புத்தங்கள் விற்பனையாகி உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான பதிப்பகங்கள் தங்கள் வெளியீடுகளை விற்பனைக்காக வைத்துள்ளது.
இளைஞர்கள் வரலாற்று நூல்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நூலை பெரிவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை வாங்கி சென்றனர். அதே போல் தன்னம்பிக்கை, ஆன்மிகம் போன்ற புத்தக அரங்குகளில் கூட்டம் இருந்து.
மேலும் சிறுவர் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த அமர்சித்ரா, கார்டூன் படபுத்தங்களை வாங்குவதற்கு சிறுவர்கள் ஆர்வம் காட்டினார்கள். தினகரன் நாளிதழ் குழுமத்தை சேர்ந்த சூரியன் பதிப்பகத்தில் தமிழ் ஆர்வம் மிக்கவர்கள் பல குடும்ப பெண்கள் திரளானோர் புத்தங்கள் வாங்கினார்கள்.
தொடந்து நேற்று இரவு வாலாஜா அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி பூட்டுதாக்கு அரசுபள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு மற்றும் ராணிப்பேட்டை கங்காதரபள்ளி மாணவர்களின் நாடக நிகழ்ச்சி நடந்தது.
இதற்கிடையே ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் உடன் பள்ளி மாணவ மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மேலும் அவர்கள் வாங்கிய புத்தகத்தில் கலெக்டர் தனது சிறு குறிப்பையும், கையெழுத்திட்டு உற்சாகப்படுத்தினார்.