அக்டோபரில் சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.11 தொடங்கி, 6.27 மணிக்கு முடிவடைகிறது. 2022 அக்டோபர் 25 

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நிகழவுள்ளது. நம்பிக்கைகளின் படி கிரகணங்கள் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது மற்றும் இக்காலத்தில் எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை. இந்த சூரிய கிரகணத்தின் போது, சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருவார்.

நவம்பரில் சந்திர கிரகணம்


2022 நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.39 மணிக்கு துவங்கும் சந்திர கிரகணம் மாலை 6.19 மணிக்கு முடிவடைகிறது


மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!


ரிஷபம்:


சூரிய கிரகணத்தின் போது, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். இதனால், வருங்காலத்தில் ஏற்படும் சில நெருக்கடிகளை தவிர்க்கலாம்.


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களின் முக்கிய வேலைகள் தடை படலாம். திருமண உறவுகளில் விரிசல் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களை வாங்குவது உங்கள் வீட்டின் பட்ஜெட்டை பாதித்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பேச்சில் நடவடிக்கையில் கவன தேவை.

விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். அவர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். எனவே, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இந்த நேரத்தில் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம்:


மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் அதிகமாக தெரியும். இந்த ராசிகள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவாக பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நிதானத்தை இழக்காமல் இருங்கள். இதனால் சில சிக்கல்களை தவிர்க்கலாம்.

துலாம்:


சூரிய கிரகணம் இந்த ராசிகளுக்கு சாதகமாக இல்லை. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். சனி பகவானின் தாக்கத்தினால் சிக்கல்கள் ஏற்படலாம். மன உளைச்சல் ஏற்படும்.

கன்னி:


சூரிய கிரகணத்தின் போது உங்கள் வியாபாரம் மந்தமாகலாம். எனவே புதிதாக எந்த வேலையையும் தொடங்க வேண்டாம். கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். எனவே கவனமுடம் செயல்படுவது, வருங்கால நெருக்கடிகளை தவிர்க்கும்.