2 people arrested for serial bike theft in Arcot 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பைக்குக்குகள் திருடு போவதாக புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து எஸ்பி தீபா சத்யன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரபு மேற்பார் வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது. அதன்படி ஆற்காடு நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் மகாராஜன், உதயசூரியன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆற்காடு மாசாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் முப்பது வெட்டி பைபாஸ் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஆற்காடு கோணன் தெருவைச் சேர்ந்த அஜித் (23), நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சூர்யா (19) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. மேலும் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 பைக்குகளும், ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 பைக்கும், திமிரியில் ஒரு பைக் என மொத்தம் 12 பைக்குகள் திருடியது தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலை டெல்லிகேட் அருகில் மறைத்து வைத்திருந்த 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 74.20 லட்சம். இதைத் தொடர்ந்து அஜித், சூர்யாவை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.