Vellore district Cricket player selected for Tamilnadu women's senior 20 over team
வேலூரை அடுத்த பொய்கையை சேர்ந்த ஆர்.எஸ்.மணி-கல்பனா தம்பதியினரின் மகள் மைத்ரேயி இவர் வேலூர் சாய்நாதபுரம் டி. .கே.எம். மகளிர் கலைக்கல்லூரியில் பயோ-கெமிஸ்ட்ரி முனைவர் பட்டம் பயின்று வருகிறார்.
சிறுவயது முதலே மைத்ரேயிக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் காணப்பட்டது. அதனால் அவர் வேலூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து அதற்கான பயிற்சிகள் மேற் கொண்டு வந்தார். ஆல்ரவுண்டரான மைத்ரேயி மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.
அதன்காரணமாக அவர் இந்தாண்டு தமிழ்நாடு பெண்கள் சீனியர் 20 ஓவர் அணிக்கு தேர்வாகி உள்ளார்.
மைத்ரேயிக்கு வேலூர் கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் சாய்விக்னேஸ்வர் மற்றும் சக வீராங்கனைகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.