🌐 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.


♖ 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.

👉 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

🌊1882ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

✍ 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஹியூபேர்ட் செசில் பூத் (Hubert Cecil Booth) தூசுறிஞ்சிக்கான (vacuum cleaner) காப்புரிமம் பெற்றார்.


முக்கிய தினம் :-



சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

🌀 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.

🌀 பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இவ்வமைப்பு 1991ஆம் ஆண்டில் இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.


பிறந்த நாள் :-


கமலேஷ் சர்மா

🏁 பொதுநலவாய நாடுகளின் 5வது செயலாளர் கமலேஷ் சர்மா 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.

🏁 இதற்கு முன்னதாக லண்டனில் இந்திய உயர் ஆணையராக (நாட்டுப் பேராளர்) பொறுப்பில் இருந்துள்ளார். இவர் 1965லிருந்து 2001 வரை இந்திய வெளிநாட்டுச் சேவையில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். 

🏁 2002 முதல் 2004 வரை ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பேராளராக கிழக்குத் திமோரில் பணியாற்றி உள்ளார். 2004இல் இந்தியாவின் உயர் ஆணையராகப் பிரிட்டிஷிற்கு நியமிக்கப்பட்டார்.


ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் 

🏆 பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் (Jean Baptiste Perrin) 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.

🏆 பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் பிரௌனியன் இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்தார். இதற்காக 1926ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுபெற்றார்.

🏆 1914-18ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் தன்னுடைய 71வது வயதில் (1942) மறைந்தார்.

செப்டம்பர் 30 - தமிழ் விக்கிப்பீடியா
செப்டம்பர் 30 (September 30) கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.

இன்றைய நிகழ்வுகள்


1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார்.

1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது.

1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர்.

1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது.

1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.

1935 – அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை செருமனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியம், செக்கோசிலவாக்கியா ஆகியன இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.

1938 – "பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்" நடத்தப்படுவது உலக நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் நாடுகடந்த அரசின் பிரதமராக விளாதிசுலாவ் சிக்கோர்ஸ்கி தெரிவு செய்யப்பட்டார்.

1945 – இங்கிலாந்தில் எர்ட்ஃபோர்ட்சயர் தொடருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

1946 – இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நேரடித் தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1947 – பாக்கித்தான் ஐநாவில் இணைந்தது.

1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு செருமனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.

1950 – இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1954 – ஐக்கிய அமெரிக்கா நாட்டிலசு என்ற உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை சேவைக்கு விட்டது.

1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.

1966 – பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது.

1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1980 – ஈதர்நெட் விவரக்கூற்றுகள் வெளியிடப்பட்டன.

1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.

1995 – தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1999 – சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.

2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

2005 – சர்ச்சைக்குரிய யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியானது.

2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.

2008 – ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர்.

2009 – சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.

2016 – ஆம்ஸ்டர்டம் அருங்காட்சியகத்தில் இருந்து 2002 டிசம்பர் 2 இல் திருடப்பட்ட வின்சென்ட் வான் கோவின் $100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஓவியங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

இன்றைய பிறப்புகள்


1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273)

1550 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631)

1864 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1937)

1870 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1942)

1900 – எம். சி. சாக்ளா, இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 1981)

1913 – ஆர். ராமநாதன் செட்டியார், தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1995)

1922 – இருசிகேசு முகர்ச்சி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2006)

1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2016)

1931 – எம். ஏ. எம். ராமசாமி, தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)

1941 – கமலேஷ் சர்மா, பொதுநலவாய நாடுகளின் 5வது பொதுச் செயலாளர்

1964 – மோனிக்கா பெலூச்சி, இத்தாலிய நடிகை

1966 – சங்கர் பாலசுப்பிரமணியன், இந்திய-பிரித்தானிய வேதியியலாளர்

1980 – மார்டினா ஹிங்கிஸ், சுவிட்சர்லாந்து டென்னிசு வீராங்கனை

1986 – ஒலிவியர் ஜிரூட், பிரான்சியக் கால்பந்தாட்ட வீரர்

1986 – மார்ட்டின் கப்டில், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்

இன்றைய இறப்புகள்


420 – ஜெரோம், உரோமானியப் புனிதர் (பி. 347)

1897 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியப் புனிதர் (பி. 1873)

1974 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர், கவிஞர் (பி. 1898)

1985 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1900)

2001 – மாதவ்ராவ் சிந்தியா, இந்திய, மத்தியப் பிரதேச அரசியல்வாதி (பி. 1945)

2004 – காமினி பொன்சேகா, சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1936)

2008 – ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)

2010 – சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர்

2011 – ரால்ஃப் ஸ்டைன்மன், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1943)

2015 – கு. திருப்பதி, தமிழக அரசியல்வாதி (பி. 1930)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (போட்சுவானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1966)

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்