✍ 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றி, வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார்.
👉 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா மறைந்தார்.
📻 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜெர்மனியின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
🌆 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
🌐 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நினைவு நாள் :-
🎌 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் மறைந்தார்.
பிறந்த நாள் :-
வினோபா பாவே
🏁 சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ககோடா என்ற கிராமத்தில் பிறந்தார்.
🏁 மகாராஷ்டிர தர்மா என்ற மாத இதழை 1923-ல் தொடங்கினார். கதர்ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.
🏁 தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். பூதான் எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். எனவே இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
🏁 இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். 1979-ல் உண்ணாவிரதம் இருந்து, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவரச் செய்தார்.
🏁 என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும் தலைவர்களாலும் ஆச்சார்யா என்று போற்றப்பட்ட வினோபா பாவே தனது 87-வது வயதில் (1982) மறைந்தார்.
ஹிரோசி அமானோ
🏆 LED விளக்கை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுள் ஒருவரான ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஹிரோசி அமானோ 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.
🏆 இவர் 2014ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, சுச்சி நாக்காமுரா ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.
🏆 இந்த நோபல் பரிசானது திறன்மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி (Diode) என்னும் குறைக்கடத்திக் கருவியைக் கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வுகள்
1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1297 – இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது.
1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது.
1609 – என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார்.
1649 – ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.
1683 – வியென்னா சமர்: போலந்து மன்னர் மூன்றாம் ஜான் சொபீசுக்கி தலைமையிலான படைகள் துமானியரின் முற்றுகையை முறியடித்தன.
1708 – சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்லசு மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை சிமோலியென்சுக் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். இது பெரும் வடக்குப் போரின் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன. சுவீடன் பேரரசு உலக வல்லமை என்ற நிலையில் இருந்து தாழ்ந்தது.
1709 – பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.
1714 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: காத்தலோனியாவின் தலைநகர் பார்செலோனா எசுப்பானிய மற்றும் பிரெஞ்சு போர்போன் இராணுவத்திடம் சரணடைந்தது.
1758 – ஏழாண்டுப் போர்: செயிண்ட் காஸ்டு நகர சமரில் பிரான்சு பிரித்தானிய முற்றுகையை முறியடித்தது.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிராண்டிவைன் சமரில் பிரித்தானியர் பென்சில்வேனியாவில் பெரும் வெற்றி பெற்றனர்.
1802 – பிரான்சு சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.
1803 – தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன.
1934 – தினமணி நாளிதழ் வெளியிடப்பட்டது.
1852 – புரட்சியை அடுத்து புவெனசு ஐரிசு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
1857 – ஐக்கிய அமெரிக்கா, யூட்டாவில் மெடோசு மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
1889 – யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
1897 – எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னர் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினார்.
1905 – நியூயார்க் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: ஆத்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த செருமனியப் படைகளை வெளியேற்றினர்.
1916 – கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். இப்பாலம் முன்னர் 1907, ஆகத்து 29 இலும் உடைந்தது.
1919 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஒண்டுராசினுள் நுழைந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கோர்சிகா மற்றும் கொசோவோவைக் கைப்பற்றின.
1944 – இரண்டாம் உலகப் போர்: மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு ஆகனில் இடம்பெற்றது.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
1945 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியப் படைகள் போர்னியோவில் சப்பானியரால் நடத்தப்பட்ட போர்க்கைதிகளின் முகாமைக் கைப்பற்றின.
1945 – இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் சப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆத்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர்.
1954 – சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
1965 – இந்திய-பாக்கித்தான் போர்: இந்தியத் தரைப்படை லாகூருக்குத் தென்கிழக்கே பாக்கித்தானின் பார்க்கி நகரைக் கைப்பற்றியது.
1968 – பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர்.
1970 – செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த 88 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இசுரேலியர்கள் செப்டம்பர் 25 வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
1974 – அமெரிக்காவில் வட கரொலைனாவில் சார்லட் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.
1978 – பெரியம்மை நோயினால் இறந்த கடைசி நபராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார்.
1982 – பாலத்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூத் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.
1989 – அங்கேரியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கிழக்கு செருமனி அகதிகள் மேற்கு செருமனிக்குள் செல்ல அங்கேரி அனுமதி அளித்தது.
1992 – அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
1997 – நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.
1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான நாடாளுமன்றத்தை அமைக்க இசுக்காட்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
1998 – யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் இலங்கை படைத்துறையின் யாழ் நகரத் தளபதி சுசாந்த மெண்டிஸ் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.[1]
2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – காசா கரையில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றும் பணியை இசுரேல் முடித்தது.
2007 – உருசியா எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை என அழைக்கப்படும் மிகப்பெரும் மரபுசார் ஆயுதத்தைச் சோதித்தது.
2008 – கால்வாய் சுரங்கத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் சுரங்கப் போக்குவரத்து ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டது.
2012 – பாக்கித்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 315 பேர் உயிரிழந்தனர்.
2012 – லிபியாவில் பங்காசி நகரில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
2015 – சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தர்.
இன்றைய பிறப்புகள்
1751 – இளவரசி சார்லட்டி (இ. 1827)
1798 – பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன், செருமானியக் கனிமவியலாளர், இயற்பியலாளர் (இ. 1895)
1847 – மேரி வாட்சன் வைட்னே, அமெரிக்க வானியலாளர் (இ. 1921)
1862 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
1874 – எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார், இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1941)
1877 – ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு, ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1946)
1882 – டி. கே. சிதம்பரநாத முதலியார், வழக்கறிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 1954)
1885 – டி. எச். லாரன்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1930)
1889 – ப. சுப்பராயன், சென்னை மாகாண முதல்வர் (இ. 1962)
1895 – வினோபா பாவே, இந்திய மெய்யியலாளர், காந்தியவாதி (இ. 1982)
1911 – லாலா அமர்நாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2000)
1915 – பூபுல் செயகர், இந்திய எழுத்தாளர், செயல்பாட்டாளர் (இ. 1997)
1917 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவர் (இ. 1989)
1944 – செர்கே அரோழ்சி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர்
1945 – காரைக்குடி மணி, தமிழக மிருதங்கக் கலைஞர்
1960 – இரோசி அமானோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
1965 – பசார் அல்-அசத், சிரியாவின் 21வது அரசுத்தலைவர்
1976 – மனோஜ் பாரதிராஜா, தமிழகத் திரைப்பட நடிகர்
1976 – முரளி கார்த்திக், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1979 – துலிப் ஜோஷி, தென்னிந்திய நடிகை
1982 – சிரேயா சரண், தென்னிந்திய நடிகை
இன்றைய இறப்புகள்
1921 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1882)
1948 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (பி. 1876)
1957 – மேரி பிராக்டர், அமெரிக்க வானியலாளர் (பி. 1862)
1957 – இம்மானுவேல் சேகரன், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடியவர் (பி. 1924)
1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் தலைவர் (பி. 1894)
1973 – சால்வடோர் அயேந்தே, சிலியின் 29வது அரசுத்தலைவர் (பி. 1908)
1978 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (பி. 1900)
1987 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (பி. 1910)
1997 – மாத்ரிக பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (பி. 1912)
1998 – பொன். சிவபாலன், யாழ்ப்பாண மாநகர முதல்வர் (பி. 1952)
2009 – யுவான் அல்மெய்டா, கியூபப் புரட்சியாளர் (பி. 1927)
2015 – ஜோசப் ராஜேந்திரன், இலங்கையின் மெல்லிசை, திரைப்படப் பாடகர்
2020 – டோனி ஓபாத்த, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1947)
இன்றைய சிறப்பு நாள்
ஜின்னா நினைவு நாள் (பாக்கித்தான்)
ஆசிரியர் நாள் (அர்கெந்தீனா)
தேசிய நாள் (காத்தலோனியா)