🏁 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் ஐவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
✦ 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
🏧 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
சர்வதேச தேங்காய் தினம்
🍲 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது.
🍲 ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.
🍲 தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
பிறந்த நாள் :-
பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு
🏆 நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.
🏆 இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது ஆஸ்வால்டு நீர்த்தல் விதி எனப்படுகிறது.
🏆 வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909-ல் நோபல் பரிசு பெற்றார்.
🏆 டெக்ஸ்ட் புக் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி, அவுட்லைன் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி என்பது உட்பட பல பாடப் புத்தகங்களையும், பகுப்பாய்வு வேதியியல், மின் ரசாயனவியல், கனிம வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
🏆 இயற்பியல் வேதியியல் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் வில்ஹெம் ஆஸ்வால்டு 79-வது வயதில் (1932) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
கிமு 44 – எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள்.
கிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.
1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1649 – காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது.
1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
1752 – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
1792 – பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று உரோமைக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.
1806 – சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.
1807 – நெப்போலியனிடம் டென்மார்க் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானிய அரசக் கடற்படை கோபனாவன் நகர் மீது எரி குண்டுகளை வீசின.
1856 – சீனாவின் நாஞ்சிங்கில் சிங் ஆட்சிக் காலத்தில் தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் உட்பட 27,000 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் அக்டோபர் வரை நீடித்தது.
1862 – யாழ்ப்பாணத்தில் ஜாஃப்னா ஃபிறீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியானது.[1]
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.
1870 – பிரான்சில் 'செடான்' என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் புருசியப் படையினர் மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.
1885 – அமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.
1898 – பிரித்தானிய, எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை நிலைநாட்டினர்.
1935 – வெப்ப மண்டலச் சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியதில், புளோரிடா மாநிலத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.
1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
1951 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
1957 – தென் வியட்நாம் அரசுத்தலைவர் நியோ தின் தியெம் ஆத்திரேலியாவுக்கு அரசுமுரைப் பயணம் மேற்கொண்டார். இவரே ஆத்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளிநாடொன்றின் முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.
1958 – அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.
1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்லோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.
1984 – ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் இரு குழுக்கலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 12 பேர் காயமடைந்தனர்.
1985 – ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1988 – இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.
1990 – மல்தோவாவின் ஒரு பகுதியான திரான்சுனிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
1992 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.
1996 – பிலிப்பீன்சு அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1998 – ஐநாவின் ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ருவாண்டாவின் சிறியநகரம் ஒன்றின் முன்னாள் நகரத்தந்தை சாந்பவும் அக்கயெசு என்பவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் 9 குற்றஙளுக்குக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.
1998 – நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் உயிரிழந்தனர்.
2006 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
2009 – கர்னூல், ஆந்திரப் பிரதேசம், கர்னூலில் இருந்து 74 கிமீ தூரத்தில் உலங்கு வானூர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
2010 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுகக்ளை அமெரிக்கா ஆரம்பித்தது.[2]
2018 – பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது. அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.
இன்றைய பிறப்புகள்
1838 – லில்லியுகலானி, அவாய் ஆட்சியாளர் (இ. 1917)
1839 – ஹென்றி ஜார்ஜ், அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1897)
1908 – நிக்கோலாய் கொசூரேவ், உருவிய வானியலாளர் (இ. 1983)
1913 – இசுரேல் கெல்ஃபாண்ட், உருசிய-அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2009)
1922 – ஆர்தர் ஆசுக்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1949 – கான்சு ஃகேர்மன் ஃகோப், அமெரிக்கப் பொருளியலாளர், மெய்யியலாளர்
1952 – ஜிம்மி கான்னர்ஸ், அமெரிக்க டென்னிசு வீரர்
1956 – நந்தமூரி ஹரிகிருஷ்ணா, தெலுங்குத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2018)
1964 – கேயானு ரீவ்ஸ், லெபனானிய-கனடிய நடிகர்
1965 – லெனக்ஸ் லூயிஸ், ஆங்கிலேய-கனடிய குத்துச் சண்டை வீரர்
1966 – சல்மா ஹாயெக், மெக்சிக்கோ-அமெரிக்க நடிகை
1968 – அனுபமா, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி
1971 – பவன் கல்யாண், ஆந்திர நடிகர், அரசியல்வாதி
1973 – இந்திக டி சேரம், இலங்கைத் துடுப்பாளர்
1973 – சுதீப், இந்திய நடிகர், பாடகர்
1988 – இஷாந்த் ஷர்மா, இந்தியத் துடுப்பாளர்
இன்றைய இறப்புகள்
1799 – யோகான் வான் அங்கெல்பீக், ஒல்லாந்த-இலங்கை குடியேற்றவாத அலுவலர் (பி. 1727)
1937 – பியர் தெ குபர்த்தென், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை நிறுவிய பிரான்சியர் (பி. 1863)
1948 – சில்வனஸ் மார்லி, அமெரிக்க தொல்பொருள், கல்வெட்டு (பி. 1883)
1969 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (பி. 1890)
1970 – வசீலி சுகோம்லின்சுக்கி, உக்ரைனியக் கல்வியாளர் (பி. 1918)
1973 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)
1973 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)
1976 – வி. ச. காண்டேகர், மராத்திய எழுத்தாளர் (பி. 1898)
1985 – மு. ஆலாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1985 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1918)
1992 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1902)
2007 – பொ. வே. பக்தவச்சலம், வழக்கறிஞர், மார்க்சியவாதி (பி. 1936)
2009 – ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (பி. 1949)
2009 – பி. எம். பாட்டியா, இந்தியப் பொருளியலாளர்
2013 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1910)
2016 – இசுலாம் கரிமோவ், உசுபெக்கித்தானின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1938)
இன்றைய சிறப்பு நாள்
சப்பானை வெற்றி கொண்ட நாள் (ஐக்கிய அமெரிக்கா)
மக்களாட்சி நாள் (திபெத்து)
விடுதலை நாள் (திரான்சுனிஸ்திரியா, நகோர்னோ கரபாக் குடியரசு, அங்கீகரிக்கப்படவில்லை)
விடுதலை நாள் (வியட்நாம், சப்பான், பிரான்சிடம் இருந்து 1945)
உலகத் தேங்காய் நாள்