சோளிங்கர் அடுத்த வைலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (22), ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது, திருமணமாகவில்லை.
இந்நிலையில் வினோத் கடந்த 7ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
கடந்த 14ம் தேதி இரவு சோளிங்கர் அடுத்த மத்தேரி கிராமத்தில் நடை பெற்ற திருவிழாவிற்கு பைக்கில் உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் மீண்டும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இந்நிலையில் சோளிங்கர்-வாலாஜா சாலையில் கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலையோரம் பைக் விபத்துக்குள்ளாகி கிடந்ததை பார்த்த பொதுமக்கள் நேற்று கொண்டபாளையம் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.