ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 2022ம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்த நேர்காணல் வரும் 30 ம் தேதி நிறைவு செய்யப்படுகிறது.
ஓய்வூதியர்கள் தங்களது இருப் பிடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தபால் நிலைய ஊழியர்கள் மூலமாக நேரடியாகவும், வீட்டில் இருந்தபடியேயும், இ-சேவை மையம் மூல மாகவும் நேர்காணல் செய்திடலாம். கருவூலத்துக்கு சென்றும் நேர்காணல் செய்யலாம்.
எனவே, இதுவரை நேர்காணல் செய்யாத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வரும் 30ம் தேதிக்குள் மேற்கண்ட ஏதேனும் ஒரு வழிகளில் நேர்காணல் செய்யுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.