ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசு துறைகளில் பணியாற்றிய ஓய்வூதிய தாரர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஓய்வூதியத்துறை இயக்குனர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களிடம் இருந்து 21 மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் நேரில் அழைத்து பிரச்னைகள் குறித்து கேட்டு அறியப்பட்டது. 

நிலுவையில் இருந்த போனஸ் தொகை 500 வழங்குவது குறித்த மனுவின் மீதும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசால் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை பெற்று வழங்குவது குறித்தும், ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் இன்சூரன்ஸ் விண்ணப்பங்கள் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து, இன்சூரன்ஸ் தொகை விடுவிப்பது தொடர்பாகவும், அதற்கான நடவடிக்கைகளை வழங்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது. 

கலெக்டர் நேர்முக உதவியாளர் கணக்கு சண்முகானந்தம், மாவட்ட கருவூல அலுவலர் சாந்தி கலந்து கொண்டனர்.