குறள் : 868

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்

கினனிலனாம் ஏமாப் புடைத்து


மு.வ உரை :

ஒருவன் குணம் இல்லாதவனாய் குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான் அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.


கலைஞர் உரை :

குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்


சாலமன் பாப்பையா உரை :

நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.


Kural 868

Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku

Inanilanaam Emaap Putaiththu


Explanation :

He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.


Horoscope Today: Astrological prediction for September 10 2022


இன்றைய ராசிப்பலன் - 10.09.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


10-09-2022, ஆவணி 25, சனிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 03.29 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சதயம் நட்சத்திரம் காலை 09.37 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் காலை 09.37 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மஹாலய பக்ஷாரம்பம். 

இராகு காலம் | Indraya Nalla Neram 

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 10.09.2022 | Today rasi palan - 10.09.2022

மேஷம்

இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகலாம். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

மீனம்

இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001