குறள் : 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
மு.வ உரை :
ஒருவன் அன்பு இல்லாதவனாய் அமைந்த துணை இல்லாதடனாய் தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால் அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
கலைஞர் உரை :
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
சாலமன் பாப்பையா உரை :
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி?மையை எப்படி அழிக்க முடியும்?
Kural 862
Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan
Enpariyum Edhilaan Thuppu
Explanation :
How can he who is unloving destitute of powerful aids and himself without strength overcome the might of his foe ?
Horoscope Today: Astrological prediction for September 03 2022
04-09-2022, ஆவணி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஜேஷ்டா விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 04.09.2022 | Today rasi palan - 04.09.2022
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது உத்தமம். ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
துலாம்
இன்று உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையால் சிறு மனவருத்தம் ஏற்படலாம். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியான மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.