ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆடு சந்தை கூடுகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆடு சந்தையான இந்த சந்தைக்கு ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆரணி, திருவண்ணாமலை, திருவள்ளூர், சித்தூர், நெல்லூர் பகுதிகளிலிருந்து ஆடுகள் அதிக அளவில் கொண்டு, வரப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக மழைப்பொழிவு நன்றாக இருப்பதால் ஆடுகளுக்கு உணவு பஞ்சம் இல்லை. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இறைச்சி விற்பனைக்காக ஆடுகளுக்கு அதிக அளவில் கிராக்கி இருப்பதால் ராணிப்பேட்டை சந்தைக்கு கொண்டு வரும் அனைத்தும் ஆடுகள் காலை 11 மணிக்குள் விற்று தீர்ந்துவிடுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ராணிப்பேட்டை சந்தைக்கு வந்த நூற்றுக்கணக்கான ஆடுகளை வியாபாரிகளும், வளர்ப்போரும் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
ஒரேநாளில் ரூ.ஒரு கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்தது. ஆடுகள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன.