நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும் :


  • அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.
  • மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.
  • அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
  • அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
  • ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.
  • அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.
  • அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
  • அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.
  • அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.
  • அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.
  • ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
  • ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.
  • ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.
  • ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
  • ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.
  • ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் நீங்கும்.
  • இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
  • இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.
  • இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
  • இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
  • இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.
  • இந்திர தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும்.
  • ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களில் பகைமையை உருவாக்கும்.
  • கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.
  • உடுக்கையை காண்பது போல் கனவு கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
  • உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
  • உத்தியானம் (தோட்டம்) வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.
  • உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.
  • உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.
  • உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.
  • ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.
  • ஊன்(இறைச்சி) விற்பதைக் கனவில் கண்டால் எதிர்பாராத தன வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.
  • எருது மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
  • எருது சீறுவது போல் கனவு கண்டால் அதிகாரம் குறையும்.
  • எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.
  • எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது.
  • ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • ஒட்டகத்தைக் கனவில் கண்டால் பயணங்களில் பல்வேறு இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.
  • ஓநாய் விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த உறவினர்களால் பகைமை ஏற்படுவதை குறிக்கிறது.
  • கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.
  • கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • காசி நகரத்தைக் கனவில் கண்டால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
  • காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
  • கிழங்குகளை கனவில் கண்டால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • கீரியை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்
  • பூக்கள் நிறைந்த கலத்தை கனவில் கண்டால் வருமானம் பெருகும் பொருளாதார வளம் ஏற்படும்.
  • பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.
  • பெண் தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • பெருச்சாளியை கனவில் கண்டால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • பேன் தலையில் இருப்பது போல் கனவு கண்டால் ஏமாற்றம் உண்டாகும்.
  • பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.
  • பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.
  • பொன்(தங்கம்) கனவில் வந்தால் மங்களம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • மயானத்தை கனவில் கண்டால் காரியத் தடங்கல் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.
  • மரத்தை பதமையான (மென்மையான) நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதைக் குறிக்கிறது.
  • மலர்களை கனவில் கண்டால் சொத்து அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • மாமிசம் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
  • மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • மிருதங்க ஒலியை கேட்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
  • மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • மீன்களை கனவில் காணுதல் நன்மை பயக்கும்.
  • மூடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • முதலையை கனவில் கண்டால் அறிவாற்றல் பெருகும் என்பதைக் குறிக்கிறது.
  • முத்தை கனவில் கண்டால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • முயலை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்பட்டு இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • மேட்டில் இருப்பது போல் கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும்.
  • யாகத்தை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  • யானையை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ரத்தத்தை கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
  • வண்டியை கனவில் கண்டால் இன்பம் மற்றும் துன்பம் சரிபாதி அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
  • வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
  • வலிமைமிக்கவர்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.
  • வாத்தை கனவில் கண்டால் கடன் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
  • விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.
  • விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
  • வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.
  • விளக்கு எரிவதைப் போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  • விளை நிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
  • வீணை ஓசையை கேட்பது போல் கனவு வந்தால் சுப செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
  • வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.