Cell phone suddenly "exploded and pants caught fire" 10th class student seriously injured in Ranipettai.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் கொண்டகுப்பத்த்தில் வசித்து வருபவர் முனியாண்டி, டிபன் கடை நடத்தி வருகிறார். இவர் மகன் முத்து(16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய   மாமா சந்தோஷ் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றைகடந்த ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.

ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிய இந்த செல் போனை முத்து பயன் படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8.30மணி அளவில் முத்து செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் தனது உறவினர் மனோகரனுடன் வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.

வாணாபாடி அருகே அம்மூர் சாலையில் பைக் வந்துகொண்டிருந்தபோது முத்துவின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து பேன்ட் தீப்பிடித்தது.

அதிர்ச்சி அடைந்த முத்து பைக்குடன் சாலை யோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கீழே விழுந்தார். முத்துவுக்கு தொடையில் பலத்த தீக் காயமும், பைக்கிலிருந்து விழுந்ததில் தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது,  மனோகரனுக்கும் காயம் ஏற்பட்டது.

இருவரும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் சிப்காட் போலீசில் புகார் செய்தனர். 

இந்நிலையில் ஆன்லைனில் வாங்கி நான்கு மாதங்களே ஆன நிலையில் செல்போன் வெடித்து மாணவர் படு காயமடைந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.