Auction of vehicles on 27th at Ranipet RTO office

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இணைக்க கட்டணம் நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக பலமுறை நினைவூட்டு கடிதம் அனுப்பியும் வாகன உரிமையாளர்களால் விடுவிக்கப்படாமல் உள்ள வாகனங்கள் வரும் 27 ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

அதன்படி, மோட்டார் பைக்குகள் 9, ஆட்டோ 15, லோடு ஆட்டோ 9, மேக்சிகேப் 7, பதிவு செய்யப்படாத மோட்டார் பைக்குகள் 9, டூரிஸ்ட் வேன் 2, கழிவுநீர் வாகனம் 1 மற்றும் ஆம்புலன்ஸ் 1 என மொத்தம் 53 வாகனங்கள் வரும் 27 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.

ஏலம் விடப்படும் வாகனங்களின் பட்டியல்கள் மற்றும் ஏலம் தொடர்பான அனைத்து வாகனங்களையும் வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் வரும் 26ம் தேதி வரை பார்வையிடலாம். ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.