காவேரிப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற மர்ம நபர் கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் அரசு டாஸ் மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வை யாளராக நந்தகுமார் பணிபுரிந்து வருகிறார். இவருடன் விற்பனையா ளர்கள் தனஞ்செழியன், ஏழுமலை ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் பணியை முடித்து விட்டு, இரவு 10 மணியள வில் கடையை பூட்டி கொண்டு சென்றுள்ள னர். தொடர்ந்து, வழக் கம்போல் நேற்று மதியம் கடையை திறக்க விற்ப னையாளர்கள் 2 பேரும் வந்தனர்.
பின்னர், கடையை திறந்து பார்த்தபோது, பின்பக்கசுவற்றில் துளை யிடப்பட்டிருந்தது. நள் ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு, திருட முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த விற்பனையாளர்கள், அங்கு சோதனை செய்த போது கடையில் இருந்த மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரிந்தது. இது குறித்த புகாரின்பேரில் அவளூர் போலிசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற சம்பவத் தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.