Acceptance of the request of the school students who seized the government bus in Bhagaveli area next to Kaveripakkam to extend it to Arcot.
இந்நிலையில் இந்த அரசு பேருந்து நேற்று காலை முசிறி பகுதியில் இருந்து பாகவெளி கிராமத்திற்கு வந்தடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு அரசு பேருந்தை சிறைபிடித்தனர். இச்சம்பவத்தை அறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அரசு பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பள்ளி மாணவர்கள் இந்த பேருந்தை ஆற்காடு வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து போலீசார் ஆற்காடு பணிமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் பணிமனை மேலாளர் ஜபார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனையடுத்து பள்ளி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை விடுவிதுளனர்.