New Inspector to take charge in Kalavai Police Station


கலவை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மங்கையர்கரசி, பணியிடமாறுதல் காரணமாக அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.

அதேபோல் திருச்சி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாரதிதாசன், பணியிட மாறுதலாக கலவை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். 

நேற்று கலவை காவல்நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாரதிதாசன், பொறுப்பேற்றார். 

புதிதாக பொறுப் பேற்ற இன்ஸ் பெக்டருக்கு சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.