Inspector explained to the students about the effects of hanging on the Bus stairs
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக ஆற்காடு உள்ளது. ஆற்காட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக ஆற்காடு உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பல நேரங்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்களின் படிக்கட்டிலும், பின்பக்க ஏணியிலும் ஆபத்தை உணராமல் தொங்கியபடி சென்று வருகின்றனர்.
இதனால் பல நேரங்களில் கீழே தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்காடு நகர காவல் நிலையம் சார்பில் நேற்று நடந்தது.
ஆற்காடு பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி கலந்து கொண்டு படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் ஏற்படும் அபாயம் குறித்தும், பின் விளைவுகள் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மேலும் படியில் பயணம் நொடியில் மரணம் என் பதை அனைவரும் உணர வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார், பள்ளி கல்லூரி மாணவர் கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.