குறள் : 881

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்


மு.வ உரை :

இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும் அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.


கலைஞர் உரை :

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்


சாலமன் பாப்பையா உரை :

நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.


Kural 881

Nizhalneerum Innaadha Innaa Thamarneerum

Innaavaam Innaa Seyin


Explanation :

Shade and water are not pleasant (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable (if) they cause pain.


Horoscope Today: Astrological prediction for September 23 2022


இன்றைய ராசிப்பலன் - 23.09.2022 | Indraya Raasi Palan | Indraya Nalla Neram


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

23-09-2022, புரட்டாசி 06, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.31 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் பின்இரவு 03.50 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 03.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00


இன்றைய ராசிப்பலன் - 23.09.2022 | Today rasi palan - 23.09.2022


மேஷம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பயணங்களால் உடல் சோர்வு, மனஉளைச்சல் உண்டாகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பெரியவர்களின் அறிவுரையால் தொழில் வியாபாரத்தில் புது புது மாற்றங்கள் ஏற்படும். 

மிதுனம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்கள் அன்பை பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வேற்று மொழி நபரால் உதவிகள் கிட்டும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. 

கும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனையால் லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுத்த கடன் வசூலாகும்.

மீனம்

இன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001