வாலாஜா அருகே நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி தெத்து தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் வேதவல்லி(14), அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, மாணவி வேதவல்லியை அவரது பெற்றோர் படிப்பு சம்பந்தமாக கண்டித்தார்களாம்.

இதனால் மனவேதனையடைந்த மாணவி, பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர், வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி வேதவல்லி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.