வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் எஸ்ஐ தீபன் சக்ரவர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பைபாஸ் சாலை மேம்பாலம் அருகே வாலிபர் போலீசாரை கண்டதும் பதுங்கி சென்றார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் பெயர் அஜித்குமார் (26) தேவதானம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். 

அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். 

அஜித்குமாருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலாஜாபேட்டை உலகநந்தார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (26) என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர்.