வாலாஜாபேட்டை புதிய பேருந்து நிலையம் ரூ.2 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
வாலாஜாபேட்டை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் தற்போது இடவசதி பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் நெரிசல் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அதனை மாற்று விதமாக நேற்று மாலை வாலாஜாபேட்டை நகராட்சிக்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் நகராட்சி அலுவலகம் பேருந்துநிலையம் ஆகியவை முழுவதும் நடைபயணமாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் போது வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலக கட்டிடம் தற்போது இட நெருக்கடியால் போதிய இடவசதியின்றி இருப்பதைப் பார்வையிட்ட அமைச்சர் நகராட்சி அலுவலகத்தை மாற்றிடத்தில் கட்டப்படும் எனவும், இதுகுறித்து கலந்து யோசிக்கப்படும் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பேருந்து நிலையத்தை தற்போது இருக்கும் இடத்தினை மேம்படுத்து வதற்காக 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மூலமாக பேருந்து நிலையம் முழுவதும் மேம்படுத்துவதற்கான பணிகள் கூடிய விரைவில் மேற்கொள்ளவும் கூடுதலாக பேருந்து நிலையத்தில் நிழற்கூடம் அமைத்திட புதிய திட்ட அறிக்கை மற்றும் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான இடத்தை வாலாஜாபேட்டை எல்லை பகுதியில் தேர்வு செய்து இருப்பதாகவும் பேருந்து நிலையத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.

நகராட்சி அலுவலக கட்டிடம் அமைக்க நகராட்சி பகுதியில் உள்ள அரசு இடத்தில் 62 சென்ட் நிலம் உள்ளதாகவும் அந்த இடத்தில் புதியக் கட்டிடம் ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் விரைவில் கட்டப்படும் என்றும் தற்போது இருக்கும் நகராட்சி கட்டிடம் மாற்றி அமைக்கப்பட்டு அங்கு வருவாய் வணிகவளாகம் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத்தலைவர் கமல்ராகவன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், நகர மன்ற உறுப்பினர்கள் இர்பான், தியாகராஜன், செந்தில், மாவட்டத்துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட், நகர செயலாளர் தில்லை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.