உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 160 மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மாநில காசநோய் அமைப்பு- சிஐஐ ஹெல்த் கேர் கூட்டமைப்பு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்க தொழில் துறை உறுப்பினர்களை அழைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் திட்டத்தில் இது ஒரு முதல் கட்டநடவடிக்கை ஆகும்.
இதன் தொடர்ச்சியாக, சிஐஐ அமைப்பின் மற்ற தொழில் நிறுவனங்களின் ஆதரவை ஒருங்கிணைத்து காசநோய் தடுப்பு திட்டத்திற் கான தொடர் பங்களிப்பை உறுதிப்படுத்துவது இந்தத் திட்டத்தின் சீரிய நோக்கமாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முதன் முறையாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மொத்த இடங்களில் முதுநிலை மற்றும் இள நிலை மருத்துவ படிப்புகளில் 50% தமிழக அரசுக்கு இந்த ஆண்டு முதல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 50 மருத்துவ இடங்கள்(எம்பி பிஎஸ்) மற்றும் 110 முதுநிலை மருத்துவ இடங்கள் அரசு கீழ் கிடைக்கவுள்ளது என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் 46/74 தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவறாயகம்,
தமிழ்நாடு மாநில காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் ஆஷா பேட்ரிக், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சந்தி ரகுமார், இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தேவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.